மரியான் நாயகி பார்வதி மேனன் சிறப்பு பேட்டி

பூ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மலையாள நடிகை பார்வதி. ஆனால் அதன்பிறகு தமிழ் சினிமாவை விட்டு காணாமல் போனவர் இப்போது மூன்று ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் தனுஷின் மரியான் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். பார்வதி நமக்கு அளித்த சிறப்பு பேட்டி இதோ...

"மரியான் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது குறித்து?

இயக்குனர் பரத்பாலா,"மரியான் படத்தின் கதையை எழுதி முடித்ததும், இதில், யார், ஹீரோயினாக நடித்தால், பொருத்தமாக இருக்கும் என, யோசித்தபோது, அவருக்கு, "பூ படத்தில் நடித்த, என் ஞாபகம் வந்துள்ளது. அதனால், என்னை அழைத்து வாய்ப்பு கொடுத்தார். இப்போது, ரசிகர்கள், என்னை, "பூ பார்வதி என, அழைக்கின்றனர்.  இந்த படம் வந்ததும், "மரியான் பார்வதி என, அழைப்பார்கள்.

மாடர்ன் உடை  அணிவதில், அதிகம் ஆர்வம் காட்டுவதாக...?

என் உடல்வாகுக்கு, ஹோம்லி, மாடர்ன் என, எந்த மாதிரியான உடையும் பொருந்துகிறது.  பாவாடை தாவணியோ, புடவையோ அணிந்தால், தமிழ் பெண்ணாகவே தெரிவதாக கூறுகின்றனர். ஆனாலும், எனக்கு மாடர்ன் உடைகள் மீது தான், அதிக விருப்பம்.

தனுஷ் ஜோடியாக நடித்தது பற்றி?

தனுஷ் நடித்த பல படங்களை பார்த்துள்ளேன். ஒவ்வொன்றிலும், அவரது நடிப்பு மெருகேறி கொண்டே இருக்கிறது. சவாலான மனிதரோடு நடித்தால், நமக்கு, சவாலாகத் தான் இருக்கும் என, நினைத்தேன். நினைத்தது போலவே, அவருடன் நடித்தது, சவாலாகவே இருந்தது. மணல் வெளியிலும், கடலோரங்களிலும், பாடல் காட்சிகளில் நடிக்கும் போது, ஏ.ஆர்.ரகுமான் இசையை ரசித்துக்கொண்டே நடித்தேன். சிரமமே தெரியவில்லை.

இன்றைய தமிழ் சினிமா எப்படி இருக்கிறது?

காமெடிக்கு மவுசு அதிகமாகி இருக்கிறது. இரண்டு மணி நேரமோ, இரண்டே கால் மணி நேரமோ, தியேட்டரில் படம் ஓடுவதே தெரியக்கூடாது.  அடடா, படம் முடிந்து விட்டதே என, நினைத்துக் கொண்டே, வெளியேறணும். இதைத் தான், இன்றைய ரசிகர்கள் விரும்புகின்றனர். இதனால், அதுபோன்ற படங்கள், தற்போது அதிகமாக வெளியாகின்றன.

முன்னணி இயக்குனரின் படங்களில் மட்டும் தான் நடிப்பீர்களா?

பெரிய இயக்குனர், புதிய இயக்குனர் என, வித்தியாசம் பார்க்கும் எண்ணம் எனக்கில்லை. கதை நன்றாக இருந்தால், நிச்சயம் நடிப்பேன். "பூ படத்தின் கேரக்டர், நிறைய பேருக்கு பிடித்திருந்தது. இதே போல, "மரியான் படத்தில்,  நான் ஏற்றிருக்கும் பனிமலர் கேரக்டரும், ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கும். கதை பிடித்திருந்தால், எந்த இயக்குனரின் படமாக இருந்தாலும் நடிப்பேன்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget