பெண்களின் முக அமைப்பிற்கு ஏற்றவாறு பொட்டு வைப்பது எப்படி?

எவ்வளவு அழகாக மேக்-அப் செய்திருந்தாலும், எவ்வளவு விலை உயர்ந்த உடைகள் அணிந்திருந்தாலும், வைரத்திலே ஆபரணங்கள் பூட்டியிருந்தாலும் முகத்திற்கு ஒரு பொட்டு மட்டும் வைக்காமல் இருந்தால், முக அழகு முழுமை பெறாது. பொட்டை விரும்பும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருப்பதால் எல்லோரையும் கவரும் விதத்தில் பொட்டுக்கள் வண்ணம், வடிவம் போன்றவைகளில் புதுமை படைத்துக் கொண்டிருக்கிறது. 
* சதுர முக அமைப்பு உள்ளவர்கள் நீளமாக பொட்டுகளை வைக்கக்கூடாது. அகலம் அதிகமுள்ள பொட்டுகளை வைத்துக்கொள்ளலாம். இவர்கள் வைத்துக்கொள்ளும் பொட்டுக்கள் நீளமானதாகவும், அகலம் குறைந்ததாகவும் இருக்கக்கூடாது. உருண்டை மற்றும் முட்டை வடிவிலான பொட்டுகள் இவர்களுக்கு பொருத்தமாக இருக்கும். 

* உருண்டை முக அமைப்பு உள்ளவர்கள் நீளமான பொட்டுகளை உபயோகிக்கவேண்டும். நீளமான பொட்டு இவர்களது உருண்டை முகத்தை சற்று நீளவாக்காக மாற்றியதுபோல் அழகுதரும்.  நெற்றி குறுகலாக இருந்தால், அவர்கள் புருவங்களுக்கு மத்தியில் பொட்டு வைக்கவேண்டும். 

* முக்கோண வடிவ முக அமைப்பு உள்ளவர்களுக்கு அனேகமாக எல்லாவகைப் பொட்டுகளும் பொருந்தும். நெற்றி அகலமாக இருந்தால், நீளமான பொட்டுகளை பயன்படுத்த வேண்டும். முக்கோண வடிவிலான பொட்டுகளும் இவர்களுக்கு நன்றாக இருக்கும். அகலமான நெற்றியாக இருந்தால், புருவத்தில் இருந்து ஒரு சென்டிமீட்டருக்கு மேல் பொட்டுவைக்க வேண்டும். 

* இதய வடிவ முகஅமைப்பு உள்ளவர்களுக்கு நீண்ட பொட்டுகள் நன்றாக இருக்கும். முகத்தின் வடிவம் மட்டுமின்றி உடை, சரும நிறம் போன்றவைகளும் பொட்டுடன் சம்பந்தப்பட்டதுதான். அதனால் அவைகளுக்கும் பொருத்தம் ஏற்படும் விதத்தில் பொட்டு வைக்கவேண்டும். கோதுமை நிற சரும பெண்களுக்கு எல்லா நிற பொட்டுகளும் பொருத்தமாக இருக்கும்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget