யமுனா சினிமா விமர்சனம்

என்ஜினியரிங் கல்லூரியில் படிக்கும் ஹீரோ பாஸ்கர் (சத்யா) தன்னுடன் படிக்கும் யமுனாவை (ஸ்ரீ ரம்யா) காதலிக்கிறான். அவளிடம் போய் காதலைச் சொல்கிறான், அவளும் அவன் காதலை ஏற்றுக் கொள்கிறாள். இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். சில நாட்கள் கழித்து திடீரென பாஸ்கரிடம் வரும் யமுனா, தன்னை மறந்துவிடு என்கிறாள். அதை கேட்ட பாஸ்கருக்கு அவள் மேல் கோபம் கோபமாக வருகிறது. காதலி மேல் வந்த கோபத்தை தணிக்க அவனது நண்பன்
, ஒரு வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போகிறான். அங்கு ஒரு பெண் இருக்கிறாள். அவளுடன் ஜாலியாக இருந்துவிட்டு வந்தால் தன் நண்பனின் கோபம் கவலை எல்லாம் பறந்து போகும் என நினைக்கிறான் பாஸ்கரின் நண்பன். அந்த வீட்டிற்கு போகிறார்கள். அங்கு போய் பார்த்தால் அங்கு அந்த பெண்ணாக இருப்பவள் அவன் காதலி யமுனா. அதைப் பார்த்த பாஸ்கர் பெரும் அதிச்சிக்குள்ளாகிறான். தன் காதலி அந்த மாதிரி பெண்ணா… அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை. அந்த மாதிரி பெண்ணாக இருந்து கொண்டு தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டாள் என்று நினைக்கும் பாஸ்கருக்கு அவள் மேல் இருக்கும் கோபம் இன்னும் அதிகமாகிறது. அவளைக் கொலை செய்துவிட முடிவெடுக்கிறான். அவளை கொலை செய்தானா? அல்லது அவளை புரிந்து கொண்டானா பாஸ்கர், என்பது மீதி கதை.

படத்தின் இடைவேளை வரைக்கும் கல்லூரியில் நடக்கும் ஜாலியான விஷயங்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம் பிடிக்கின்றன. இடைவேளையில் உல்லாசத்திற்கு போன இடத்தில் ஹீரோ தன் காதலியைப் பார்ப்பது செமயான பஞ்ச். அதற்கு பிறகு அவள் அங்கு போனதற்கான காரணத்தை இயக்குர் சாமார்த்தியமாக சொல்கிறார். இடைவேளைக்குப் பிறகு படம் சீரியஸான கதைக்குள் நுழைந்து நகர்கிறது. க்ளைமேக்ஸ் கொஞ்சமும் எதிர்பாராததாக இருக்கிறது.

ஹீரோவாக நடித்திருக்கிறார் சத்யா. பாலுமகேந்திராவின் நடிப்புப் பயிற்சிப் பள்ளியில் படித்தவர் சத்யா. சில இடங்களில் நடிப்பில் நன்றாகவே ஸ்கோர் பண்ணுகிறார். எதார்த்த சினிமா என்பதாலோ என்னவோ இவரது கேரக்டரை கையாலாகதனமான கதாப்பாத்திரமாக உருவாக்கியிருக்கிறார்கள். படத்தில் வில்லன்களிடம் செமயாக அடி வாங்குகிறார்.

இவருக்கு ஜோடியாக யமுனா கேரக்டரில் நடித்திருப்பவர் ஸ்ரீரம்யா. தெலுங்கில் நடித்துக் கொண்டிருந்த ஸ்ரீரம்யாவை தமிழ்ல நடிப்பதற்காக அழைத்துக் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் கணேஷ்பாபு. ஸ்ரீரம்யா செம க்யூட் அன்ட் ஸ்மார்ட். நடிப்பில் பிச்சு உதறுகிறார் ஸ்ரீரம்யா. 

இடைவேளைக்குப் பிறகு படம் முழுக்க ரம்யாவின் நடிப்பு ராஜ்யம்தான். ஒரு பாடலில் மழையில் நனைந்து செம கவர்ச்சியாகவும் நடனமாடியிருக்கிறார் ரம்யா.

எங்கேயும் எப்போதும் படத்தில் பார்த்த வினோதினி இந்தப் படத்தில் சந்திரிக்கா என்னும் வில்லி கேரக்டரில் வருகிறார். இவங்க, பார்க்கத்தான் அழகு ஆனா கொடுக்கிற எபெக்ட் எல்லாம் டெரர் மாதிரிதான்.

சில காட்சிகளில் மட்டுமே வருகிற முஸ்லிம் பாய் கேரக்டரில் பாலாசிங் நடித்திருக்கிறார். இவரை வில்லியின் ஆட்கள் தூக்கிச் சென்று கத்தியால் சொருகும் போது, அடப்பாவமே பாய்க்கு இந்த நிலமையா… என்று நினைக்கத் தோன்றுகிறது.

நட்புக்காக நடித்திருக்கும் ஆடுகளம் நரேன் ரெண்டே ரெண்டு காட்சியில் வந்து போகிறார். பசங்க சிவகுமார் சத்யாவின் அப்பாவாக நடித்திருக்கிறார். பசங்க செந்தி கதாநாயகியின் அம்மாவாக நடித்திருக்கிறார். கல்லூரி பேராசிரியராக புண்ணியக்கோடி வரும் சாம்ஸ் ரசிகர்களை சிரிக்க வைக்க முயற்சிக்கிறார். கதாநாயகி மேல் ஒரு தலைக் காதலை வளர்த்துக் கொண்டு வளைய வரும் கேரக்டரில் படத்தின் இயக்குநர் கணேஷ்பாபுவும் நடித்திருக்கிறார்.

வைரமுத்து படத்தின் பாடல்களை எழுதியிருக்கிறார். அமைத்து அறிமுகமாகியிருக்கிறார் இலக்கியன். பாடல்கள் எல்லாமே நன்றாகத்தான் வந்திருக்கின்றன. டிம்ப டிம்பா குத்துப்பாட்டு ரசிகர்களை குத்தாட்டம் போட வைக்கும். இடைவேளைக்கு பிறகு வரும் காட்சிகளில் பின்னணி இசையும் இலக்கியனுக்கு கை கொடுக்கிற மாதிரி இருக்கிறது.

படத்தை எழுதி இயக்கிருப்பவர் கணேஷ்பாபு. பத்திரிகையாளராக இருந்து பின்பு சினிமாவில் நுழைந்து நிறைய படங்களில் நடித்தவர் யமுனா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார். நல்ல கதைதான். இடைவேளையில் இவர் வைத்திருக்கிற பஞ்ச் செம சூப்பர். அதை இடைவேளைக்குப் பிறகு ஒவ்வொன்றாக ஓப்பன் பண்ணும் விதமும் ரசிக்க வைக்கிறது.

நன்றி : தமிழ் டிஜிட்டல் கினிமா
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget