அடிதடியில் அமர்களமான இளைய தளபதியின் பிறந்த நாள் விழா!


விஜய தனது 38வது  பிறந்த நாளை இன்று (22.06.2012) கொண்டாடினார். வருடா வருடம் ரசிகர்களோடு பிறந்த நாளை கொண்டாடுவது வழக்கம். அன்று பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு அளித்து மகிழ்வார். அதே போல் இந்த வருடமும் சென்னை எழும்பூர் குழந்தைகள் அரசு மருத்துவமனைக்கு காலை 11 மணிக்கு சென்றார், அங்கு பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தார். மொத்தம் 40 குழந்தைகளுக்கு அணிவிக்க இருந்தார். சரியான இட வசதி இல்லாததாலும்,
நெருக்கடி மிகுதியாக இருந்ததாலும் 5 குழந்தைகளுக்கு மட்டுமே மோதிரம் அணிவித்தார். இதற்கிடையே விஜயின் பாதுகாவலராக வந்தவர்கள் மற்றும் அங்கு இருந்த ரசிகர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் மருத்துவமனை கண்ணாடி கதவுகள் அடித்து நொறுக்கப் பட்டன. பிறகு அங்கு இருந்த போலீசார் வந்ததும் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப் பட்டது, இப்பிரச்சனை காரணமாக  விழாவின் பாதியிலே விஜய் சென்று விட்டார். புனேயில் நடைபெறும் துப்பாக்கி படப் பிடிப்பில் கலந்து கொள்ள விமான நிலையம் சென்று விட்டார். மேலும் இன்றைய ரசிகர்கள் நிகழ்ச்சி மற்றும் உதவிகள் வழங்கும் நிகழ்சிகளை அவர் தந்தை எஸ்.எ.சந்திரசேகர் சாலி கிராமத்தில் உள்ள அவர் திருமண மண்டபத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு நடத்தி வருகிறார்,  


பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget