செட்டிநாடு கோழி வறுவல்

தேவையானப் பொருட்கள்:
§  கோழி - ஒன்று
§  பெரிய வெங்காயம் - 2 (நடுத்தரமானது)
§  இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு
§  பூண்டு - 5 பல்
§  பச்சை மிளகாய் - 4
§  உலர்ந்த மிளகாய் - 5
§  கறிவேப்பிலை - 12 இலைகள்
§  மஞ்சள்தூள் - அரைத் தேக்கரண்டி
§  எலுமிச்சை சாறு - ஒரு மேசைக்கரண்டி
§  அரிசி மாவு - 2 மேசைக்கரண்டி
§  உப்பு - தேவையான அளவு
§  எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை:

§ முழுக்கோழியை நன்கு சுத்தம் செய்து, இரண்டு சரி பாதியாக வெட்டிக் கொள்ளவும். மார்பு, தொடைப் பகுதி சதைகளில் இரண்டு மூன்று ஆழமான வெட்டுக்கள் உண்டாக்கவும்.
§  வெங்காயம், பூண்டு, இஞ்சி ஆகியவற்றைத் தோலுரித்து நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாய், உலர்ந்த மிளகாய் ஆகியவற்றின் காம்புகளை நீக்கி நறுக்கின வெங்காயம், இஞ்சி, பூண்டுடன் சேர்த்து, சிறிது நீர் சேர்த்துக் கொண்டு, விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
§  கறிவேப்பிலையை கழுவி சுத்தம் செய்து, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அரைத்து வைத்துள்ள விழுதுடன் மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, அரிசி மாவு, தேவையான உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
§  இந்த கலவையினை இறைச்சியின் மீது நன்கு பூசி, பிறகு நறுக்கின கறிவேப்பிலையில் பிரட்டி சுமார் இரண்டு மணி நேரங்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து ஊறவிடவும்.
§  ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடேறியதும் அதில் மசாலாத் தடவிய கோழி இறைச்சியை போட்டு எல்லா பக்கமும் வேகுமாறு இரண்டு நிமிடங்கள் பிரட்டி வேகவிடவும்.
§  பிறகு தீயைச் சற்று குறைத்து, வாணலியை மூடி வைத்து சுமார் பதினைந்தில் இருந்து இருபது நிமிடங்கள் வேகவிடவும். அவ்வபோது திறந்து இறைச்சியைத் திருப்பிப் போட்டு, மிதமுள்ள மசாலாவினையும் தடவி, தேவையெனில் சிறிது நீரினையும் தெளித்து, வேகவிடவும்.
§  இறக்குவதற்கு முன்பு இரண்டு நிமிடங்கள் தீயைச் சற்று அதிகமாக்கி, மேல்புறம் சற்று மொறுமொறுப்பாக வேகுமாறு செய்யவும். கருகிவிடக் கூடாது.
§  கறி பொன்னிறமானதும் எடுத்து, துண்டுகள் போட்டுப் பரிமாறவும்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget